"பசித்திரு- புசித்திரு- தனித்திரு"
-- இது
இராமலிங்க அடிகளாரின்
அருளுரை.சாப்பிட்டுக்
கொண்டும் இருக்க வேண்டும்;அதே
நேரத்தில் பசியுடனும் இருக்க
வேண்டும் என்று கூறுகிறாரே
என்று குழப்பமடைய வேண்டாம்.
-- அடிகளாரின்
இக்கருத்திற்கு நமது நாயகி
ஸ்வாமிகள் அருமையான விளக்கம்
தருகிறார் தமது கீர்த்தனையில் —
ஸ்வாமிகளின்
விளக்கம் இதோ:-
"தீ3வடொ
பா4த்
பனி யோக்வடொ
கோ3
யோக்வடொ
ர:னொ—ஸ்ரீ
தே3வு
ப4ஜன
ராதிதீ3ஸுனும்
ஹொய்லேத்
ர:னொ’"
- இக்கீர்த்தனை
வரிகளில் நாயகி ஸ்வாமிகள்
கூறுவதாவது —
"போட்
மெந்து3
நீ:ஸ்தக்
பா4த்
ஜெமந் ஹோனா!
க்யானு
ரெங்கு3
ஹுத்ரி
ஜேடை3
அங்குன்
ஸங்குஸ் ஐகுலுவோ"
(முன்
பகுதியை இங்கு இணைக்கவும்)
வயிறு
முட்ட சாப்பிடுவது என்பார்களே
அப்படி வயிற்றில் துளி இடம்கூட
இல்லாமல் வயிறு நிறைய உண்ணக்கூடாது
என்கிறார் ஸ்வாமிகள்.
அப்படி
யானால் எப்படி சாப்பிட
வேண்டும்?விளக்கமாகச்
சொல்கிறார் ஸ்வாமிகள் —
வயிற்றை
நான்கு பகுதிகளாகப் பிரித்துக்
கொண்டால் அதில் இரண்டு பங்கு
உணவு — ஒரு பங்கு தண்ணீர் — ஒருபங்கு
வெற்றிடம் என்ற அளவில்தான்
உண்ண வேண்டும்.அதாவது
பாதி அளவில்தான்(பாதி
வயிறு மட்டுமே)
உணவும் கால்
வயிற்றில் நீரும் கால்வயிறு
காலி இடமுமாக இருக்க
வேண்டும். இதைத்தான்
இராமலிங்க அடிகளாரும், "பசித்திரு-
புசித்திரு" -என்று
ரத்தினச் சுருக்கமாகச்
சொல்லிப் போந்தார்.தொடர்ந்து
அடிகளார், "தன்த்திரு" -என்றாரே
அதையும் நாயகி ஸ்வாமிகள்
தமது இதே கீர்த்தனையில்
தொடர்ந்து விளக்கம்
தருகிறார்.அது,இது:-
"தே3வு
ப4ஜன
ராதிதீ3ஸுனும்
ஹொய்லேத்
ர:னொ" —என்கிறார்.
--இரவும்
பகலும் இறைவழிபாடு(பஜனை)
செய்து
கொண்டிருக்க வேண்டும் என்ற
நாயகி ஸ்வாமிகளின் விளக்கத்தின்
சூத்திரமே அடிகளாரின் தனித்திரு
என்ற சொல் எனலாம்.
'அப்படி
இரவும் பகலும் பஜனை செய்யாதவன்
பூமிக்குச் சுமையாக-பாரமாக
உள்ளான்'-என்று
குற்றம் சாட்டுகிறார் நாயகி
ஸ்வாமிகள்.
எனவே,
இனியேனும்
நாம் வீட்டிலோ-குறிப்பாக
விருந்துகளிலோ வயிறு முட்ட
முட்ட உண்டு அவஸ்தைப் படாமல்
நாயகி ஸ்வாமி களும், இராமலிங்க
அடிகளாரும் அவுளியதற்கொப்ப "பசித்திருப்போம்;
புசித்திருப்போம்,
தனித்திருப்போம்" (இறைவன்
நாமத்தை விடாது ஜெபித்திருப்போம்)
அளவோடு
உண்டு—வளமோடு வாழ்வோமாக!